ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் அமுலுக்கு வருகிறது! அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது...

ஆசிரியர் - Editor I
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் அமுலுக்கு வருகிறது! அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது...

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், ஊழல் எதிர்ப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

நீதி, சிறைச்சாலைகள் நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இது தொடர்பான நடவடிக்கைகளை நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த ஆணைக்குழுவிற்கான புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அது குறித்து அரசியலமைப்பு பேரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, குற்றச்செயல்களில் பாதிக்கப்பட்ட தரப்பினர் - சாட்சிகளுக்கான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் ஏற்பாடுகளும்,

செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வௌியிட்டுள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு