முதல் நாளிலேயே சாதனை படைத்த ஜவான்!! -அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது-

ஆசிரியர் - Editor II
முதல் நாளிலேயே சாதனை படைத்த ஜவான்!! -அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது-

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லீ இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ஜவான்'. 

இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' நேற்று வியாழக்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜவான்' திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் 129.6 கோடி ரூப்பாக்கு மேல் வசூல் செய்துள்ளதாக இயக்குனர் அட்லீ தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு