SuperTopAds

மாணவர்களுக்கு நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுத்தருவது ஆசிரியரின் கைகளில்தான் உள்ளது

ஆசிரியர் - Editor III
மாணவர்களுக்கு நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுத்தருவது ஆசிரியரின் கைகளில்தான் உள்ளது

மாணவர்களின் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் அவர்கள்  நல்லவர்களாகவும்  பண்புள்ளவர்களாகவும் வளர வேண்டுமானால் நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுத்தருவது  ஆசிரியரின் கைகளில்தான் உள்ளது என  என கல்முனை  அஸ்-ஸுஹரா வித்தியாலய அதிபர் எம். எச். எஸ். ஆர். மஜீதியா தெரிவித்தார்.

 அஸ்-ஸுஹரா வித்தியாலய மாணவர்களின் ஆங்கில ஆற்றல் வெளிப்பாடு காரணமாக  அண்மையில் நடைபெற்ற  மாவட்ட மட்ட ஆங்கில தினப்போட்டில் முதலாம் இடத்தை பெற்ற மாணவர்களை பாராட்டி  அவர்கள் மத்தியில் இன்று   உரையாற்றும் போது  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

இன்றைய சிறுவர்கள் நாளைய உலகின் தலைவர்கள்'என்பதற்கு இனங்க இன்றைய கல்வி முறையில் ஏட்டுக் கல்வியை மையமாக கொண்டு அமையாமல் அதாவது பரீட்சை பெறுபேற்றை அடிப்படையாக கொண்ட திணிப்பு முறையிலான கற்பித்தலானது மாணவனிடம் முன்னேற்றத்தை ஏற்படுத்தாது மாறாக ஒரு மாணவனின் எதிர்கால இலக்கை ஆசிரியர்களே நிர்ணவிப்பவர்களாகின்றார்கள்.எனவே மாணவனிடம் இலை மறைக்காயாக காணப்படுகின்ற ஆளுமையான படைப்பு திறமைகளான (கவிதை,கட்டுரை,பேச்சு திறமைகள்,ஓவியம் தீட்டுதல்,புத்தாக்கச் செயற்பாடுகள்,இசையுடன் கூடிய நடன கலைகள்,அத்துடன் விளையாட்டு திறமைகள்)போன்ற பலவகையான திறமைகளை கண்டறிந்து அவற்றினை முழுமையான வகையில் வெளிக்கொண்டு வருவதன் மூலமே மாணவனிடம் தலைமைத்துவம், விட்டுக்கொடுப்பு, ஒற்றுமை, அனுபவம் என்பவற்றுடன் நல்லொழுக்கம் என்பவற்றை தோற்றுவிக்க முடியும்.

அத்துடன் பொதுவாக மாணவர்கள் சந்திக்கின்ற உளப்பிரச்சினைகளை நோக்குவோமாயின் இணைப்பாட விதாமான செயற்பாட்டில் விருப்பமின்மை,கற்றலில் ஏற்படுகின்ற இடர்பாடுகள்,மனநிலையில் திடீர் மாற்றம்,துக்கம் என பல இயல்புகளுடன் மாணவன் காணப்படலாம்.அத்துடன் மாணவர்கள் பல்வேறுப்பட்ட சூழ்நிலைகளிலிருந்து வருபவர்களாகவும்,அவ்வொவ்வருவரின் மனதின் தன்மையும் வேறுப்பட்டதாக காணப்படும் எல்லா மணவர்களின் தன்மையை எல்லாராலும் அறிமுடியாது.எனவே ஆசிரியர் 'பாத்திரத்தின் அளவிற்கேற்ப நீர் ஊற்ற வேண்டும்'என்ற கருத்திற்கு இனங்க மாணவர்களின் மனநிலையை அறிந்து கல்வி புகுட்டுபவராக செயற்பட வேண்டியது அவசியமாகும்.

மேலும் தற்போது மாணவ சமூகத்தை அதிகளவு ஈர்த்துள்ள விடயங்களான போதைப்பொருள் பாவனை,அத்துடன் தொழிநுட்ப வளர்சியின் விளைவான தொலைத்தொடர்பு சாதனங்களின் பாவனைகளின் காரணமாக அதிகளவான மாணவர்கள் சமூகத்தில் சீரழிவதினை காணக்கூடியதாக உள்ளது.இதுனூடாக பாடசாலைகளில் உளப்பிரச்சினைகள் ஊற்றெடுக்கின்றன.எனவே வன்முறை சார்ந்த சார்ந்த எதிர்மறையான எண்ணங்களை மாணவர்கள் மனதிலிருந்து துடைத்தெறிய வேண்டுமாயின் ஆசிரியர்களின் விழிப்புணர்வுகளுடன் அன்பான அரவணைப்புடன் கூடிய கற்ப்பித்தல் முறையால் மட்டுமே சாத்தியமாகும்.

எனவே தான் ஆசிரியர்கள் இன்றைய காலத்தில் மாணவர்களுக்கான ஒழுக்கக்கல்வி,அறநெறிக்கல்வி,தொழநுட்பக்கல்வி,சகோதர மொழிக்கல்வி மற்றும் ஆங்கிலக்கல்வி என்பவற்றை சிறு பராயத்திலிருந்தே கற்ப்பிக்க வேண்டும் என்பதினை வலியுறுத்தி அதனூடாகவே அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதினையும் சுட்டிக்காட்டுகின்றார்கள்.அத்தோடு பயிற்ச்சியுடன் கூடிய தொழிற்கல்வி மாணவர்களிடையே வழங்கப்பட வேண்டும்.எனவே இவற்றை மையமாக கொண்டே ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்பாடானது முன்னெடுக்கப்பட வேண்டும்.கல்விக்கூடங்கள் பல்கலைவளர்ப்புக்கூடங்கள்.  மாணவர்களிடையே அறிவு, திறமை மற்றும் நேர்மறை மனப்பான்மைகளை வளர்க்கும் மையங்களாக கல்விக்கூடங்களே கருதப்படுகின்றன. தற்போதைய கால சூழலில் கற்றோராயிருக்கும்  தாய் ,தந்தை இருவரும் பணிக்கு செல்லவேண்டியுள்ளது.  கிராமப்புற பெற்றோர்களில் பலரோ போதுமான  கல்வியறிவற்றோராய்  உள்ளனர். இதன் காரணமாக மாணவர்கள் மீது அவர்களின் கண்காணிப்பு குறைந்து கொண்டே வருகிறது.  பள்ளிகளில்தான் பெரும்பான்மையான நேரத்தை மாணவர்கள் செலவிடுகிறார்கள். எனவே,அவர்களின் தனிமனித ஒழுக்கத்தை வடிவமைப்பதில் பள்ளிகளின் பங்கு அதிகமாக உள்ளது.தற்போது மாணவர்கள் இணைய வழி கற்றலிலும் ஈடுபட்டு கற்கின்றனர். இதுபோன்ற சூழலில் பாலுணர்வுகளைத்தூண்டும் தேவையில்லாத வலைத்தளங்களின் பால் ஈர்ப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதன்  காரணமாக அவைகளை மாணவர்கள் முயன்று பார்க்க வாய்ப்புகள் ஏராளம். இதன் காரணமாக தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவில் பெற்றோர்களின் நேரடியான ,மறைமுகமான கண்காணிப்புகள்  மிகவும் அவசியமாகின்றன. தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்ற நிலையில் பதின்பருவ மாணவர்களை இவ்வாறு கண்காணிப்பது  பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு சவாலான செயலாகும்.

அந்தவகையில் மாணவர்களின் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஆசிரியர்கள் எவ்வாறான நடவடிக்கைகளை கையாள வேண்டும் என நோக்குவோமானால் குழந்தைகளின் கல்வியில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் ஆசிரியர்கள தான்.அதனால் மாணவனின் கல்வி முறையில் வெற்றியும்,தோல்வியும் அவர்களின் பங்களிப்பிபே பெறுபான்மையானதாக காணப்படுகின்றது என்றார்.