ஜெயிலர் பெரும் வெற்றி!! -அனிருத்துக்கு 1.4 கோடி மதிப்புள்ள காரை பரிசாக கொடுத்த கலாநிதி மாறன்-

ஆசிரியர் - Editor II
ஜெயிலர் பெரும் வெற்றி!! -அனிருத்துக்கு 1.4 கோடி மதிப்புள்ள காரை பரிசாக கொடுத்த கலாநிதி மாறன்-

சூப்பஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் படம் ஓகஸ்ட் 10 ஆம் திகதி வெளியாகி விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. 

இதுவரை இந்த படம் 525 கோடி ரூபாக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

இந்நிலையில், ஜெயிலர் படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இசையமைப்பாளர் அனிருத்திதுக்கு காசோலை மற்றும் புத்தம் புதிய போர்ஷே காரை பரிசாக கொடுத்தார். 

இந்த காரின் விலை 1.44 கோடி ரூபா என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு