பிக்பாஸ் 7வது சீசனில் களமிறங்கும் கிரண்

ஆசிரியர் - Editor II
பிக்பாஸ் 7வது சீசனில் களமிறங்கும் கிரண்

விஜய் தொலைக்காட்சியில் மிகப்  பிரம்மாண்டமாக பிக்பாஸ் சீசன்-7 ஆரம்பமாக உள்ளது.

செப்டம்பர் மாத இறுதி அல்லது ஒக்டோபர் 2 ஆவது வாரத்தில் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படலாம் என்கின்றனர்.

தற்போதைக்கு இந்நிகழ்ச்சி வெகு விரைவில் வருகிறது, காத்திருங்கள் என சூப்பரான புரொமோக்கள் வெளியாகி வருகின்றன.

இரண்டு வீடு இந்த முறை புதியதாக வருகிறது அதோடு வேறென்ன விஷயங்கள் புதியதாக வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

6 ஆவது சீசனிற்கு 70 கோடி ரூபாவரை சம்பளம் வாங்கி கமல்ஹாசன் இந்த முறை 130 கோடி ரூபாய்க்கு சம்பளம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.

எனவே பிக்பாஸ் 7 ஆவது படு பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக சில நடிகைகளின் கிளாமர் உடை புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது. அந்த லிஸ்டில் இருக்கும் ஒரு நடிகை பிக்பாஸ் 7 ஆவது சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

அவர் வேறுயாரும் இல்லை நடிகை கிரண் ரதோட் தான் 7 ஆவது சீசனில் வருகிறார் என்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு