SuperTopAds

157 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு துஆ பிரார்த்தனை -

ஆசிரியர் - Editor III
157 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு துஆ பிரார்த்தனை -

157 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு துஆ பிரார்த்தனை 

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157 வது ஆண்டு நிறைவு  நிகழ்வினை முன்னிட்டு   பல சமூக நலப்பணிகளும் சமய நிகழ்வுகளும் நாடு முழுவதிலும் இடம்பெற்று வருகின்றன.

இதன்படி இத்தினத்தை முன்னிட்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் துஆ பிரார்த்தனை இன்று மாலை   கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.

முதலில் அதிதிகள் பாராம்பரிய பொல் அடியுடன்  வரவேற்கப்பட்டு தென்னை  மரநடுகை அதிதிகளினால் பள்ளிவாசல் வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது.பின்னர்  கிராஅத் ஓதலுடன் நிகழ்வு  ஆரம்பிக்கப்பட்டு வரவேற்பு உரையினை  கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்  மேற்கொண்டதுடன்  கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வைத்தியர் எஸ்.எம்.ஏ அஸீஸ்  பொலிஸ் தினத்தின் முக்கியத்தும் குறித்து உரையாற்றினார்.

விசேட உரையினை கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவின்  ஆலோசனை  குழு பொதுச்செயலாளரும் காணி மத்தியஸ்த சபை பிரதான மத்தியஸ்தருமான எம்.ஐ.எம் ஜிப்ரி (எல்.எல்.பி)  , பிரதம அதிதி உரையினை அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.ஏ.என்.கே.தயமந்த விஜயசிறி உம்  மேற்கொண்டனர்.

விசேட துஆ பிரார்த்தனையை கல்முனைகுடி பேஷ் இமாம் முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மௌலவி ஏ.எல்.நாஸர் (மன்பஈஈ) முன்னெடுத்தார்.

மேலும் அதிதிகளுக்கு பொன்னாடைகள் போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நிகழ்வின் இறுதியாக  நன்றி உரையினை கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட்  மேற்கொண்டார்.

இந்நிகழ்வில்  கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே இப்னு அசார் மற்றும்  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் விசேட அதிரடிப்படை கடற்படை அதிகாரிகள்  சமூக பொலிஸ் குழு உறுப்பினர்கள் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு ஆலோசனை  குழுவின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 அத்துடன் இறுதியாக  அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.ஏ.என்.கே.தயமந்த விஜயசிறி நிகழ்வு நடைபெற்ற பள்ளிவாசல் தொடர்பில் பள்ளித்தலைவர் மற்றும் மக்களுடன் சிநேக பூர்வமாக உரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.