SuperTopAds

காதலை அறிவித்தர் விஜய் தேவரகொண்டா

ஆசிரியர் - Editor II
காதலை அறிவித்தர் விஜய் தேவரகொண்டா

முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய்தேவரகொண்டா பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சமந்தா, விஜய்தேவரகொண்டா ஆகியோர் நடிப்பில் ‘குஷி’ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. இதனை ஒட்டி படத்தின் புரோமோஷன்களில் படக்குழுவினர் தீவிரமாக உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட விஜய் தேவரகொண்டா நள்ளிரவில் நடிகை சமந்தாவுக்கு வீடியோ கால் செய்து பேசிய வீடியோ வைரலானது. இன்று படத்திற்காக சமூகவலைதளங்களில் மாலை நேரலைக்கு வர உள்ளார் விஜய்தேவரகொண்டா.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் ஒருவரின் கையை பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘என் வாழ்வில் நிறைய நடந்திருக்கிறது. ஆனால், இது ரொம்பவே ஸ்பெஷல். விரைவில் சொல்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

குஷி’ படத்திற்கான பேட்டியில் நடிகை சமந்தா விஜய் தேவரகொண்டாவுக்கு காதலி இருக்கிறார் என்றும் விரைவில் திருமணம் என்றும் சொன்ன செய்தி வைரலானது.

மேலும் ராஷ்மிகாவுடனும் விஜய் தேவரகொண்டாவுக்கு காதல் எனவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து ஏதும் சொல்ல இருக்கிறாரா அல்லது படம் குறித்தான அறிவிப்பா என்பது விரைவில் தெரிய வரும்.