இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்காத விடயங்களை இலங்கை எடுக்க வேண்டும்!

ஆசிரியர் - Admin
இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்காத விடயங்களை இலங்கை எடுக்க வேண்டும்!

இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்காத விடயங்களை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்க தவறுவார்களாக இருந்தால் அதனுடைய விளைவுகள் மிக மோசமாக போய்விடும் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்காத விடயங்களை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்க தவறுவார்களாக இருந்தால் அதனுடைய விளைவுகள் மிக மோசமாக போய்விடும் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில்இடம்பெற்ற தமது கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கட்சியினுடைய மத்திய குழு கூட்டம் கூட்டப்பட்டிருந்தது இன்று இருக்கின்ற அரசியல் நிலமைகள், தமிழ் மக்கள் தொடர்ந்து முகம் கொடுத்து வருகின்ற பிரச்சனைகள் முக்கியமாக இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இவைகள் தொடர்பாக கலந்து ஆராய்ந்து இருந்தோம்.

இந்த விடயங்கள் தொடர்பில் சில நடவடிக்கைகள் எவ்வாறு எடுக்கலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்தோம், அத்தோடு எங்களுடைய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உடைய நிலைப்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்களை ஆராய்ந்து இருந்தோம்.

அரசியல் ரீதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை வளர்ப்பது மாத்திரமல்லாது தமிழ் மக்களுடைய அன்றாட பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேசுகின்ற விடயங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து இருந்தும், அதேபோன்று அண்மையில் எங்களை சந்தித்த தூதுவர்கள் முக்கியமாக அமெரிக்கா தூதுவர் அவர்கள் இங்கு எங்களை சந்தித்திருக்கிறார்.

எங்களுடைய பிரச்சனைகள் தொடர்பில் எவ்வளவு தூரம் அமெரிக்கா எங்களுக்கு உதவ முடியும் என்பது தொடர்பில் அவரிடம் கேட்டு அறிந்து கொண்டோம். அவர்களுக்கு இருக்கின்ற எல்லைக்குள் சில விடயங்களை செய்யலாம் என்று கூறி இருக்கின்றார்கள். இந்த விடயங்கள் தொடர்பாகவும் எங்களுடைய மத்திய குழ அங்கத்தவர்களுடன் கலந்துரையாடி இருக்கிறோம்.

அதேபோன்று குருதூர் மலை தொடர்பிலும் கலந்துடையாடப்பட்டது.

இதன் போது சீனாவினுடைய ஆயுதக் கப்பல் ஒன்று இலங்கைக்கு வரப்போவதாக கூறப்படும் செய்திகள் தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்?

ஒரு ஆபத்தான நிலையில் இலங்கை போய்க் கொண்டிருக்கின்றது போல் தெரிகிறது ஏனென்றால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு அதே போன்று இலங்கை சீனாவுடன் வைத்திருக்கின்ற உறவு நிலமைகளை மோசமாக்கி கொண்டு வருகிறது என்று நினைக்கின்றேன்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் மிக கவனமாக கையாள வேண்டும் சீனாவின் உடைய ஆதிக்கம் இங்கு கூடிக் கொண்டு வருமாக இருந்தால் முக்கியமாக இராணுவ ரீதியான ஆதிக்கங்கள் கூடிக் கொண்டு வருமாக இருந்தால் அது இலங்கையில் இருக்கின்ற மக்களை பெரிய அளவில் பாதிக்கும்.

எங்களைப் பொறுத்தமட்டில் நாங்கள் இந்தியாவின் தென் கரையிலே வசிக்கின்ற நாங்கள் இங்கு சீனா தனது பிரசங்கத்தை கூட்டுகின்ற முயற்சி எடுக்கிறது, அதாவது எங்களுடைய வடபுலத்திலே இதன் மூலம் அவர்கள் இந்தியாவினுடைய பாதுகாப்புக்கு அச்சத்தை கொடுத்து விடுவார்கள் என்கின்ற எண்ணப்பாடு இந்தியாவுக்கு வருமாக இருந்தால் அது எங்களைத்தான் கூடுதலாக பாதிக்கும். ஆகவே நாங்கள் இதில் மிகக் கவனமாக எங்களால் இயன்ற அளவுக்கு, இந்த ஆய்வுக்கு கப்பல் வருவது என்பது இந்தியாவைப் பொருத்தவரையில் அவர்களுடைய பாதுகாப்புக்கு அச்சம் வரக்கூடியதாக அவர்கள் பார்க்கின்றார்கள் ஆகவே அதனை தவிர்ப்பதற்கான முழுமையான முயற்சியை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்க தவறுவார்களாக இருந்தால் அதனுடைய விளைவுகள் மிக மோசமாக போய்விடும்.

ஆகவே இந்த இரண்டு நாடுகளையும் எப்படியும் அவருடைய ஆதிக்கங்களை இங்கு இல்லாமல் பண்ணுவதன் மூலம் முக்கியமாக சீனா தன்னுடைய ஆதிக்கத்தை, ஏனென்றால் இயற்கையாகவே இந்தியாவினுடைய ஆதிக்கம் எங்கு இருந்து கொண்டிருக்கும். இது ஆயிரக்கணக்கான வருடங்களாக இருக்கின்ற உறவு, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இருக்கின்ற தூரம் 24, 25 கடல் மயில் தூரத்துக்குள் தான் வருகிறது, ஆகவே இது மிக கவனமாக கையாள வேண்டிய விடயம் அவ்வாறு கையாளுவதன் மூலம் தான் இலங்கை பெரியது ஒரு பிரச்சனைக்குள் சிக்கிக் கொள்ளாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு