முத்த சர்ச்சை!! -ரூபியேல்ஸ்க்கு 90 நாட்கள் தடை-

ஆசிரியர் - Editor II
முத்த சர்ச்சை!! -ரூபியேல்ஸ்க்கு 90 நாட்கள் தடை-

மகளிர் உலகக்கிண்ண இறுதிப் போட்டி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது கட்டி அணித்து முத்தமிட்ட ஸ்பெய்ன் உதைபந்தாட்டத் தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ்க்கு பீபா 90 நாட்கள் தடை விதித்துள்ளது.

மகளிர் உலக கால்பந்து போட்டி அண்மையில் அவுஸ்திரேலியா - நியூசிலாந்தில் நடந்தது. இதில் ஸ்பெயின் முதல் முறையாக சாம்பியன் வென்றது. அந்த அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

மைதானத்தில் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஸ்பெயின் வீராங்கனைகளை அந்நாட்டு கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார். லூயிஸ் ரூபியேல்சின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்தன. லூயிஸ் ரூபியேல்ஸ் மன்னிப்புக் கேட்டார்.

பிரான்ஸ் உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் பதவி விலகும் வரை விளையாட மாட்டோம் என மகளிர் அணி தெரிவித்து இருந்தது. 

இந்த சம்பவம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியதால் பீபா மேற்கொண்ட ஒழுங்கு நடவடிக்கையின் பின்னர் லூயிஸ் ரூபியேல்ஸ்-க்கு 90 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு