6 வாரத்திற்கு முன்பே ஆட்டத்தை ஆரம்பித்த லியோ!
மாஸ்டர் படத்திற்குப் பிறகு விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் அடுத்து தயாராக இருக்கும் தரமான சம்பவம் தான் லியோ. இதன் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறை தினத்தில் ரிலீஸ் ஆகிறது. இந்தபடத்தை தமிழகத்தில் மட்டுமல்ல உலக அளவில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்க துடிதுடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு பற்றிய விபரம் தற்போது வெளிவந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
லியோ படம் வெளியாகும் தேதியிலிருந்து ஆறு வாரத்திற்கு முன்பே வெளிநாடுகளான பிரிட்டனில் படத்திற்கான டிக்கெட் புக்கிங் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் ஒரு தமிழ் படத்திற்கு ஆறு வாரத்திற்கு முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு துவங்கியிருப்பது இதுதான் முதல் முறை. இதுவே இந்த படத்தின் சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.
பிரிட்டனில் மட்டுமல்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட வேறு சில நாடுகளிலும் லியோ படத்தின் முன்பதிவு முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் இந்த படத்தின் முன்பதிவு அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ் சினிமா வரலாற்றில் லியோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், நிச்சயம் இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு, கலெக்ஷன்போன்றவற்றில் மிகப்பெரிய சாதனை புரியும் என்றும் கூறப்படுகிறது. அதிலும் வெளிநாடுகளில் லியோ படத்தின் முன்பதிவு மட்டும் ஆறு வாரத்திற்கு முன்பே துவங்கப்படும் என்ற இந்த செய்தி தற்போது தளபதி ரசிகர்களை கெத்து காட்ட வைக்கிறது.
மேலும் லியோ படத்தின் ஆடியோ லான்ச் வெளிநாட்டில் நடைபெறும் என்று சொல்லப்பட்டது. ஆனால் பட குழு திட்டமிட்டது போல் செப்டம்பர் 30ஆம் தேதி அங்கிருக்கும் ஆடிட்டோரியம் அனைத்தும் புக் ஆன நிலையில், இப்போது சென்னையிலேயே லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த முடிவு செய்துள்ளனர்.