SuperTopAds

திடீரென வெளிநாடு புறப்பட்ட விஜய்

ஆசிரியர் - Editor II
திடீரென வெளிநாடு புறப்பட்ட விஜய்

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படம் வருகிற ஒக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது.

இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். தாற்காலிகமாக இப்படத்திற்கு தளபதி 68 என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் ஜெய், அபர்ணா டாஸ் ஆகியோர் நடிக்கபோவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தளபதி 68 படத்திற்கான VFX மற்றும் லுக் டெஸ்ட் பணிகளுக்காக தளபதி விஜய், படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் ஜெகதீஸ் ஆகியோர் இன்று வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.