கடைசி விவசாயி படத்திற்கு இரு தேசிய விருதுகள்

ஆசிரியர் - Editor II
கடைசி விவசாயி படத்திற்கு இரு தேசிய விருதுகள்

இந்திய அரசாங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. 

அதன்படி 69 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் 2021 ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்பட்டது.

இதில், இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரிப்பில் வெளியான 'கடைசி விவசாயி' திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் திரைப்படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு