பிக்பாஸ் 7 ஆவது சீசனில் கலந்துகொள்ளப்போவது யார் யார்?

ஆசிரியர் - Editor II
பிக்பாஸ் 7 ஆவது சீசனில் கலந்துகொள்ளப்போவது யார் யார்?

பிக்பாஸ் 7 ஆவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியின் முதல் புரொமோ அண்மையில் வெளியாகி இருந்தது. அதில் தண்ணீருக்கு நடுவே தடுப்பனையில் கமல்ஹாசன் காருடன் நிற்பது போல் வீடியோ அமைந்துள்ளது.

இப்போது ரசிகர்கள் அடுத்து எப்போது நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படவுள்ளது  என கேள்விகள் கேட்டு வருகிறார்கள். ஆனால் இதுவரை சரியாக நிகழ்ச்சி எப்போது ஆரம்பமாக போகிறது என்ற விவரம் வரவில்லை.

செப்டம்பர் கடைசியில் அல்லது ஒக்டோபர் 2 ஆம் வாரத்தில் ஆரம்பிக்கலாம் என்று தற்போது தெரிகிறது.

பிக்பாஸ் புரொமோ வந்ததில் இருந்து நாளுக்கு நாள் போட்டியாளர்கள் குறித்து தான் நிறைய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அப்படி இப்போது சிலரது பெயர் அடிபடுகிறது.

ரேகா நாயர், ப்ருத்விராஜ் (பப்லு), தொகுப்பாளர் ரக்ஷன் இவர்கள் 3 பேரின் பெயர்கள் அதிகம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு