போர்ட்டபிள் எனும் பல் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் நாற்காலி அன்பளிப்பு
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வாய்ச் சுகாதார பிரிவினால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல்.எம். றிபாஸ் வழிகாட்டலில் கல்முனை பிராந்திய வாய்ச்சுகாதார நிபுணர் எம்.எச்.எம் சரூக் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை(15) நடமாடும் பல் மருத்துவப் பிரிவு சாய்ந்தமருது அல்-ஜலால் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதன் போது பாடசாலையின் அதிபர் திரு.எம்.ஐ.எம்.சைபுதீன் போர்ட்டபிள் எனும் பல் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் நாற்காலியை கல்முனை பிராந்திய வாய்ச்சுகாதார நிபுணர் எம்.எச்.எம் சரூக்கிடம் அன்பளிப்பாக ஒப்படைத்தார்.
மேலும் குறித்த அன்பளிப்பை பாடசாலையில் எதிர்காலங்களில் மேற்கொள்ளப்படும் வாய்ச்சுகாதாரம் தொடர்பான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதுடன் குறித்த உபகரணத்தின் தேவை அறிந்து அன்பளிப்பு செய்த பாடசாலை நிர்வாகத்திற்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.