அஸ்-ஸுஹறா வித்தியாலய ஆரம்பப் பிரிவு மாணவர்களின் வரலாற்று சாதனை
அஸ்-ஸுஹறா வித்தியாலய ஆரம்பப் பிரிவு மாணவர்களின் வரலாற்று சாதனை
அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு மாணவர்ளின் ஆங்கிலமொழி தினப்போட்டியில் வலய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று மாவட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இம்மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று(17) பாடசாலையின் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா தலைமையில் விஷேட காலை ஆராதனையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கல்முனை வலயக்கல்வியின் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஜிஹானா ஆலிப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களைக் வாழ்த்திப் பாராட்டினார்.
அடுத்து தரம் ஒன்று மாணவர்களின் "புத்தாண்டு காலம் "நிகழ்வும் இடம்பெற்றது.
தரம் ஒன்று மாணவர்களிறன் சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் பாடத்தின் அலகு 04இல் உள்ள புத்தாண்டு காலநிழ்வின் மூலம் மாணவர்கள் ஏனைய சமய பண்பாட்டு கலாச்சாரப் பழக்கவழக்கங்களான உணவு,உடை பண்பாட்டுப் பழக்கங்களை செயற்பாடுகளினூடாக உள்வாங்கி எதிர்காலத்தில் அனைத்து இனங்களையும் மதித்து சமுக இணக்கப்பாட்டுடன் வாழ்வதற்கான அடித்தளமாக இச்செயற்பாடுகள் முன்மாதிரியாக உள்ளன.இந்நிகழ்விலும் பிரதம அதிதி ஜிஹானா ஆலிம்,அதிபர் எம் எம் எஸ் .ஆர்.மஜீதிய்யா பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் எம்.ரி.அனப்,உறுப்பினர்கள்,ஆசிரியர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,பழைய மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.