11 வயது வித்தியாசமுள்ள நடிகருடன் பிரியா பவானி ஷங்கர்

ஆசிரியர் - Editor II
11 வயது வித்தியாசமுள்ள நடிகருடன் பிரியா பவானி ஷங்கர்

சின்னத்திரையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த  நட்சத்திரங்களில் ஒருவரான பிரியா பவானி ஷங்கர் மேயாத மான் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் இடம்பிடித்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு வெளிவந்த பத்து தல, ருத்ரன் மற்றும் பொம்மை என மூன்று திரைப்படங்கள் வெளிவந்தது. அடுத்ததாக இந்தியன் 2, விஷால் 34 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் உருவாகும் பீமா எனும் திரைப்படத்திலும் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார் பிரியா பவானி ஷங்கர்.

இயக்குனர் ஹர்ஷா என்பவர் இயக்க 44 வயதாகும் தெலுங்கு நடிகர் கோபிசந்த் ஹீரோவாக நடிக்கும் பீமா என்ற படத்தில் 33 வயதாகும் பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார் என அறிவித்துள்ளனர். இப்படத்தின் First லுக் போஸ்டர் கூட தற்போது வெளியாகியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு