புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உதவினால் கடும் நடவடிக்கை!! -எச்சரிக்கும் பிரித்தானியா அரசு-

ஆசிரியர் - Editor II
புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உதவினால் கடும் நடவடிக்கை!! -எச்சரிக்கும் பிரித்தானியா அரசு-

பிரித்தானியாவிற்க்குள் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு சட்ட விரோதமாக உதவுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரித்தானியா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் சிறு படகுகள் மூலம் நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உதவுவோருக்கு, அடுத்த ஆண்டு முதல் கடும் அபராதம் விதிக்க அந்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு தங்கள் வீடுகளை வாடகைக்கு விடும் வீட்டு சொந்தக்காரர்களுக்கு 5,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட உள்ளது. தற்போது அபராதத்தொகை வெறும் 50 பவுண்டுகள் மட்டுமே.

ஒரே வீட்டில் பல சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை தங்கவைத்துள்ளது தெரியவந்தால், முதன்முறை ஒரு புலம்பெயர்ந்தோருக்கு 10,000 பவுண்டுகள் வீதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது. முன்பு இந்த அபராதத்தொகை 1,000 பவுண்டுகளாக இருந்தது.

மேலும், சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை வேலைக்கு வைத்தால், முதன்முறை புலம்பெயர்ந்தோர் ஒருவருக்கு 45,000 பவுண்டுகள் வீதம் அபராதம் விதிக்கப்பட உள்ளது. தற்போது இந்த அபராதம் 15,000 பவுண்டுகளாக உள்ளது.

இந்த நடவடிக்கைகள் 2024 ஆம் ஆண்டு அமுலுக்கு வர உள்ள நிலையில், உள்துறை அலுவலகம் அது தொடர்பாக நிபுணர்களிடம் ஆலோசனை கேட்க உள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு