SuperTopAds

சிறுநீரக சத்திர சிகிச்சையின் பின் சிறுவன் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணை!!

ஆசிரியர் - Editor I
சிறுநீரக சத்திர சிகிச்சையின் பின் சிறுவன் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணை!!

சிறுநீரக அறுவை சிகிச்சையின் பின் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்­த­ர­வி­டப்பட்­டுள்­ள­தாக கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்திய­சா­லையின் பணிப்­பாளர் வைத்­தியர் ஜீ. விஜ­ய­சூ­ரிய தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக அவர் தெரி­விக்­கையில்,செய­லி­ழந்த சிறு­நீ­ர­கத்­துடன் பிறப்­பி­லேயே மற்றைய சிறு­நீ­ரகம் ஒட்­டி­யி­ருந்­த­தா­லேயே மற்­றைய சிறு­நீ­ர­கமும் செய­லிழந்­தி­ருக்கும் என நான் எண்­ணு­கிறேன். 

அதன் கார­ண­மா­கவே செய­லி­ழந்த சிறு­நீ­ர­கத்தை அகற்றும்போது மற்­றைய சிறு­நீ­ர­கமும் நீக்­கப்­பட்­டுள்­ளது. இந்த விடயத்தில் சிறுவனின் பெற்­றோ­ரி­ட­மி­ருந்து எனக்கு எவ்­வித முறைப்­பாடும் கிடைக்­க­வில்லை.

மேலும், சத்­திர சிகிச்சை மேற்­கொண்டு 7 மாதங்கள் கடந்­துள்­ளன. இந்­நி­லையில், இந்த சத்­திர சிகிச்சை மேற்கொண்ட விசேட சத்­திர சிகிச்சை நிபுணர் தற்­போது நாட்டை விட்டு வெளி­யே­றி­யுள்ளார்.

இருப்­பினும், அதன் பின்னர் சிகிச்சைகளை மேற்­கொண்ட வைத்­தி­யர்­க­ளிடம் வாக்கு மூலங்­களை பெற்­றுக்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. எனினும், இது தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­மாறு 

நான் பிரதிப் பணிப்­பா­ள­ருக்கு உத்­த­ர­விட்­டுள்ளேன் என்றார். 

இதே­வேளை, பக்­க­ச்சார்பற்ற விசா­ர­ணைகள் மூலம் சிறுவன் தொடர்பில் இடம்­பெற்ற அனைத்து விட­யங்­களும் வெளிக்­கொ­ண­ரப்­பட வேண்டும் என அரச மருத்­துவ அதிகாரிகள் சங்­கத்தின் ஊடகப் பேச்­சாளர் வைத்­தியர் சம்மில் விஜே­சிங்க தெரி­வித்தார்.

அவர் மேலும் இது தொடர்பில் கூறுகையில், இவை தனித்து எடுத்த தீர்­மா­னங்கள் அல்ல. சிறுவர் நோய் விசேட நிபு­ணர்கள், சிறு­நீ­ரகம் தொடர்­பான நிபு­ணர்கள், கதிரியக்கவியலா­ளர்கள் உள்­ளிட்ட பலரும் இத­னுடன் தொடர்புபட்­டுள்­ளார்கள். 

மருத்­துவ அறிக்­கை­க­ளுக்கு ஏற்ப அனை­வரும் இணைந்தே இந்த தீர்­மா­னங்­களை எடுத்துள்ளனர்.எனினும், பக்­க­ச்சார்­பற்ற விசா­ர­ணைகள் மூலம் இடம்­பெற்ற அனைத்து விட­யங்­களும் வெளிக்­கொ­ண­ரப்­பட வேண்டும். 

சுகாதாரத்துறையில் நாளுக்கு நாள் பதிவாகும் சம்பவங்கள் தொடர்பில் மக்களின் அதிருப்தியை இல்லாமல் செய்ய சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.