SuperTopAds

பழுதடைந்த சிறுநீரகத்தோடு நல்ல நிலையிலிருந்த சிறுநீரகத்தையும் அகற்றிய வைத்தியர்கள்! இறுதியில் 3 வயது குழந்தை பலி..

ஆசிரியர் - Editor I
பழுதடைந்த சிறுநீரகத்தோடு நல்ல நிலையிலிருந்த சிறுநீரகத்தையும் அகற்றிய வைத்தியர்கள்! இறுதியில் 3 வயது குழந்தை பலி..

கொழும்பு - லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின் மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளது. 

சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் கிருமி தொற்று காரணமாக கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதும் 03 மாதங்கள் வயதுடைய ஆண் குழந்தை நேற்று முன்தினம் (27) உயிரிழந்திருந்தது.

குழந்தைக்கு சிறுநீரகம் தொடர்பான நோய் நிலைமை இருப்பதாக வைத்தியர்கள் கண்டறிந்ததாகவும், வலது சிறுநீரகம் ஆரோக்கியமாக உள்ள நிலையில் இடது சிறுநீரகத்தை அகற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அறுவை சிகிச்சையின் போது ஆரோக்கியமான வலது சிறுநீரகமும் அகற்றப்பட்டதாக வைத்தியர்கள் பின்னர் அறிவித்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இரண்டு சிறுநீரகங்களும் இல்லாததால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வரை டயாலிசிஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட குழந்தை, பின்னர் கிருமி தொற்று காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.