SuperTopAds

இலங்கை அணிக்கு இன்னும் தேவை 138 ஓட்டங்கள்

ஆசிரியர் - Editor II
இலங்கை அணிக்கு இன்னும் தேவை 138 ஓட்டங்கள்

மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இந்நிலையில்இ மூன்றாவது டெஸ்ட் போட்டி பார்படாசில் தொடங்கியது. நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முன்னணி ஆட்டக்காரர்கள் சொதப்பியதால் அந்த அணி 5 விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. மழையால் ஆட்டம் சிறிது தடைபட்டது.

அதன்பின் ஜோடி சேர்ந்த ஷேன் டாவ்ரிச் மற்றும் கேப்டன் ஜேசன் ஹோல்டர் ஜோடி 115 ரன்கள் சேர்த்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி 200 ரன்களை கடந்தது. ஷேன் டாவ்ரிச் 71 ரன்னிலும்இ ஜேசன் ஹோல்டர் 74 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில்இ மேற்கிந்திய அணி 69.3 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இலங்கை அணி சார்பில் லஹிரு குமரா 4 விக்கெட்டும். கசின் ரஜிதா 3 விக்கெட்டும்இ சுரங்கா லக்மல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்துஇ இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. வெஸ்ட் இண்டீசின் சிறப்பான ப்ந்து வீச்சால் இலங்கை அணி திணறியது.

அந்த அணியின் நிரோஷன் டிக்வெலா 42 ரன்களும்இ குணதிலகா 29 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இதனால் இலங்கை அணி 59 ஒவர்களில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

மேற்கிந்திய அணி சார்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டும்இ ஷனோன் காப்ரியல் 3 விக்கெட்டும்இ கீமர் ரோச் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்துஇ மேற்கிந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. ஆனால் இலங்கை அணியினர் துல்லியமாக பந்து வீசி அசத்தினர்.

இதனால் முதலில் இருந்தே மேற்கிந்திய அணி விக்கெட்டுகளை இழந்தது. 56 ரன்களை எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. கடைசி வரிசை பேட்ஸ்மேனான கீம்ர் ரோச் ஓரளவு தாக்குப்பிடித்தார். வெஸ்ட் மேற்கிந்திய 28.4 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 88 ரன்கள் எடுத்துள்ளது.

இத்துடன் மேற்கிந்திய அணி 138 ரன்கள் கூடுதலாக பெற்றுள்ளது. எனவே இந்த டெஸ்டில் இலங்கை அணி எளிதில் வெற்றி பெறும் என தெரிகிறது.