13 அமுலாக்கம், மாகாணசபைத் தேர்தல், தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும்! - வலியுறுத்திய மோடி

ஆசிரியர் - Editor IV
13 அமுலாக்கம், மாகாணசபைத் தேர்தல், தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும்! - வலியுறுத்திய மோடி

இலங்கை 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறும் நடத்துவது வலியுறுத்தியுள்ள இந்திய பிரதமர் நரேந்திரமோடி தமிழ்மக்களிற்கு கௌரவமான வாழ்வை உறுதி செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.     

“தமிழர்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என நம்புகிறோம். சமத்துவம், நீதி மற்றும் அமைதிக்கான நல்லிணக்க செயல்முறையை முன்னெடுத்துச் செல்வேன்" என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்தியாவினதும் இலங்கையினதும் பாதுகாப்பு நலன்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ளதால் இந்தியாவின் அயல்நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கையில் இலங்கைக்கு விசேட இடமுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் இருநாடுகளுக்கும் இடையிலான விமானப்போக்குவரத்தினை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நெருக்கடியில் உள்ள நேரத்தில் அந்த நாட்டுமக்களுடன் இந்தியா தோளோடு தோள் நிற்கவேண்டும் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

மக்களின் வர்த்தகம் மற்றும் போக்குவரத்தை அதிகரிப்பதற்காக நாகப்பட்டினம் காங்கேசன்துறைக்கு இடையில் படகுச்சேவையை ஆரம்பிக்கவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று ஒருவருடகாலத்தை பூர்த்தி செய்துள்ளமைக்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள இந்திய பிரதமர் இலங்கை மக்கள் கடந்த வருடம் பல நெருக்கடிகளை எதிர்கொண்டார்கள் ஆனால் நெருங்கிய நண்பர்கள் போல நாங்கள் நெருக்கடியான தருணத்தில் இலங்கை மக்களுடன் தோளோடுதோள் நின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு