SuperTopAds

இராணுவத்தினரால் கடற்கரை பகுதி தூய்மைப்படுத்தப்பட்டு சிரமதானம் முன்னெடுப்பு

ஆசிரியர் - Editor III
இராணுவத்தினரால் கடற்கரை பகுதி தூய்மைப்படுத்தப்பட்டு சிரமதானம் முன்னெடுப்பு

இராணுவத்தினரால் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட  கடற்கரை பகுதிகளை  சுத்தப்படுத்தல் விசேட வேலைத்திட்டம்  இன்று(14)   முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது அம்பாறை மாவட்டம் இலங்கை  இராணுவத்தின் 24 வது காலாட்படை பிரிவின்  கட்டளைத் தளபதி  மேஜர் ஜெனரல் விபுல சந்திரசிறியின்   ஆலோசனைக்கமைய     241 இராணுவ பிரிவின் கட்டளை அதிகாரி  கேணல் தனிக பதிரட்ன  வழிகாட்டலில்  இராணுவ முகாம் சூழல் அமைந்துள்ள  கடற்கரை  மற்றும்   அண்டிய பல பகுதிகள்  சிரமதான  பணியினை  இராணுவத்தினர்  முன்னெடுத்தனர்.

இதன்போது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடனும் டெங்கு நோயின் தாக்கத்தை இப்பிரதேசத்தில் கட்டுப்படுத்தும் முகமாகவும் கடற்கரை வீதியோரங்களில்  தேங்கிக் காணப்பட்ட கழிவுகள்  குப்பைகூழங்கள் காடுமண்டிய இடங்கள் யாவும் அகற்றி சுத்தப்படுத்தி சூழலை அழகுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நடவடிக்கையின் போது கல்முனை  மாநகரை தூய்மைப்  படுத்தும் மாநகர ஆணையாளர்  ஏ. எல். எம். அஸ்மியின்  அறிவுறுத்தலுக்கமையை  கல்முனை மாநகர  சபை சுகாதாரப் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் யு. எம். இஸ்ஹாக் தலைமையில் மேற்பார்வை உத்தியோகத்தர்களின் நெறிப்படுத்தலில் இந்த  சிரமதானப்பணிக்கு பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது.

மேலும் இச்சிரமதானத்திற்கு  கல்முனை உப பிரதேச செயலகத்தின் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நெறிப்படுத்தலில் இராணுவத்தினருடன்  சமுர்த்தி பயனாளி குடும்பங்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் தங்களது பங்களிப்பினை வழங்கி  சிரமதான பணியில் ஈடுபட்டனர்.   குறித்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பட்டதுடன்  எதிர்காலங்களில் கல்முனை பிராந்தியத்தில்  குப்பை கூழமில்லாமல் சுத்தமாக பேணுவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் எடுப்பது  குறித்தும் இராணுவ உயரதிகாரிகளினால் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.