யாழ்ப்பாணம் - கொழும்பு புகைரத சேவை 5 மாதங்களின் பின் இன்று அமைச்சர் குழாத்துடன் வெள்ளோட்டம்...
யாழ்ப்பாணம் - கொழும்பு புகைரத சேவை சுமார் 5 மாதங்களின் பின் வெள்ளோட்ட நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
அநுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையிலான நவீன மயமாக்கப்பட்ட வடக்கு ரயில் பாதைக்கான புனரமைப்பு பணிக்காக இந்திய அரசாங்கம் இலங்கை ரூபாய் 3ஆயிரம் கோடிகளை வழங்கி புனரமைப்பு பணிகள் 5 மாதங்களாக இடம்பெற்றது.
புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் முதல் முறையாக கொழும்பிலிருந்து வெள்ளோட்டமாக அமைச்சர்கள் மற்றும் இந்திய தூதுவருடன் யாழ்ப்பாணம் வந்துள்ளது.
நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்.இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெபாஸ்கரன் ,பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பிரத்தியோகச் செயலாளர் குலேந்திரன் சிவராம்,
யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறி மோகனன், மற்றும் வடபிராந்திய இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான முகாமையாளர் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.