SuperTopAds

வன்முறைகளை உடன் நிறுத்துங்கள்!! -பிரான்ஸ் போராட்டக்காரர்களுக்கு கொல்லப்பட்ட சிறுவனின் பாட்டி வேண்டுகோள்-

ஆசிரியர் - Editor II
வன்முறைகளை உடன் நிறுத்துங்கள்!! -பிரான்ஸ் போராட்டக்காரர்களுக்கு கொல்லப்பட்ட சிறுவனின் பாட்டி வேண்டுகோள்-

பிரான்ஸில் கடந்த வாரம் 17 ஆவயது சிறுவன் பொலிஸாரால் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் பெரும் கலவரம் வெடித்துள்ளது.

அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் போராடி வருகின்றனர். இந்நிலையில், பலியான சிறுவனனின் பாட்டி நாடியா, வன்முறையில் ஈடுபடுவதற்கு போராட்டக்காரர்களைஅமைதியாக இருக்ககுமாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

இப்போது பொருட்களை உடைக்கும் நபர்களுக்கு நான் சொல்கிறேன், அதை உடனே நிறுத்துங்கள். நீங்கள் சேதப்படுத்தும் கார்களோ, பள்ளிகளோ, அல்லது பேருந்துகளோ உங்களுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. 

அவற்றை சேதப்படுத்தாதீர்கள். தாய்மார்கள்தான் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். எனது பேரனின் படுகொலை, எனது வாழ்க்கையையும் எனது மகளின் (நேஹலின் தாயார்) வாழ்க்கையையும் மாற்றிவிட்டது என்றாலும் பொலிஸாரை துன்புறுத்துவதை நான் விரும்பவில்லை. 

நீதி அதன் வழியில் இயங்க வேண்டும். எனக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரிதான் தண்டிக்கப்பட வேண்டியவர். பொலிஸாரின் மீது எனக்கு எந்தவிதமான வெறுப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.