யாழில் முறையற்ற மருத்துவ மற்றும் உடற்கூற்று கழிவகற்றல்.. ஆபத்தை எதிர் நோக்கப் போகும் மக்கள்.

ஆசிரியர் - Editor I
யாழில் முறையற்ற மருத்துவ மற்றும் உடற்கூற்று கழிவகற்றல்.. ஆபத்தை எதிர் நோக்கப் போகும் மக்கள்.

யாழ்.மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் இருந்து அகற்றப்படும் மருத்துவ  மற்றும் உடற் கூற்றுக் கழிவுகளால் வலி வடக்கு மக்கள் பாரிய சுகாதார அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

 யாழ்  மாவட்டத்தில்  சாவகச்சேரி பருத்தித்துறை , தெல்லிப்பளை மற்றும் யாழ் போதனா வைத்தியசாலைகளின் சத்திர சிகிச்சை தொகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் மனித உடற்பாகங்கள் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு பின்புறமாக அமைந்துள்ள எரியூட்டல் தொகுதியில் எரிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாது யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஐந்துக்கு மேற்பட்ட சத்திர சிகிச்சை தொகுதிகளை கொண்ட தனியார் வைத்திய சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளும் குறித்த எரியூட்டால் தொகுதிக்கு அனுப்பப்படுகிறது.

தெல்லிப்பழையில் அமைந்துள்ள எரியூட்டல் தொகுதியாது யாழ் மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவ மற்றும் உடற் கூற்றுக் கழிவுகளை தொடர்ச்சியாக ஏரியூட்டி வந்த நிலையில் தற்போது செயல் இழந்துள்ளது.

புற்றுநோய் கழிவுகள் எரியூட்டல் கற்குவாரிகளில் கொட்டுதல்.

குறித்த எரியூட்டல் தொகுதியில் புற்றுநோய் காரணமாக அகற்றப்படும் உடற்பாகங்கள் எரியூட்டும் போது உரிய வெப்பநிலை பேனப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஏற்கனவே எழுந்தது.

இவ்வாறு எரியூட்டப்படும் கழிவுகள் அரைகுறையாக எரிந்த நிலையில் நல்லிணக்காபுற பகுதியில் அமைந்துள்ள கற் குவாரிகளுக்குள் கொட்டப்படுகிறது.

இவ்வாறு கொட்டப்படும் களிவுகளில் இருந்து வெளியேறும் கிருமிகள் மண்ணுக்குள் சென்றடைவதனால் நிலத்தடி நீர் மற்றும் விவசாய பொருட்களில் நச்சுக்கல்கள் கலப்பதற்குரிய சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளது.

குறிப்பாக புற்றுநோயாளர்களிடமிருந்து அகற்றப்படும் உடற்பாகங்களில் உங்கள் கிருமிகள் நாளடைவில் நிலத்தடி நீரில் கலந்தால் பாரிய தாக்கத்தை செலுத்தும் என வைத்தியத்துறை சார்ந்தவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வைத்தியசாலையில் பயன்படுத்தப்பட்ட ஊசிகள், இரத்தம் ஏற்றப் பயன்படுத்தப்பட்ட குழாய்கள், சேலைன் போத்தல்கள் உள்ளிட்டவை பெருமளவு கழிவுப் பொருட்கள் நல்லிணக்கபுரக் கற்குவாரிகளில்  கொட்டப்பட்டமை புகைப்பட ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 குறித்த பகுதியில் ஏற்பட உள்ள சுகாதார அனத்த நிலைமை தொடர்பில் பிரதேசசபை மற்றும் சுகாதாரத்துறையினர் நன்றாக அறிந்திருந்திருப்பதாக கூறும் மக்கள் அதனை தடுப்பதற்கு யாரும் முன் வரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

நீர், மண் மாசடைதல் 

சாதாரண கழிவுகளை கூட முகாமை செய்யாமல் நிலத்தடி நீர்வளத்தை பாதிக்கும் வகையில் கொட்டும் பிரதேசசபை அதனுள் மருத்துவ கழிவுகளை கொட்டுவது எந்தவகையில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளதுடன், 

பிரதேசசபை மற்றும் சுகாதாரத்துறை இந்த விடயத்தில் பொறுப்பற்று நடப்பதுடன் கள்ள மௌனம் சாதிப்பதாகவும் மக்கள் சாடியுள்ளனர்.

அண்மையில் யாழ்.திருநெல்வேலி மற்றும் அரியாலை மயானம் ஆகியவற்றில் இவ்வாறு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டமை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தபோதும் அவ்வாறான நடவடிக்கை தொடர்ந்த வண்ணமே உள்ளன. 

இவ்வாறு யாழ் மாவட்டத்தில் பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் மருத்துவமனை கழிவு முகாமைத்துவத்தின் தற்போதைய நிலையை மதிப்பீடு செய்யஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வு அறிக்கைகள் உறுதிப்படுத்தல்.

அவ்ஆய்வறிக்கையில் “மருத்துவக்கழிவினால் ஏற்படும் மோசமானபராமரிப்பின் விளைவாக பல சுகாதாரசிக்கல்கள்ஏற்படுகின்றன.

 உதாரணமாக மருத்துவக்கழிவுககள் அகற்றும் போதுஊசிகள், கையில் காயங்கள் ஏற்படுகின்றன. மற்றும் உடல் ஆரோக்கிய சீர்கேடு அதிகரித்தல், நோய்க் கிருமிகள் பரவுதல்,எச்.ஐ. வி 0.1வீதம், ஈரல் அழற்சி B 30 வீதம் மற்றும் ஈரல் அழற்சி C 1.8 வீதமும் வகைகள்குருதியில் கலந்து பாரியளவில் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

 அத்துடன் தோல் நோய் ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, காசநோய் மற்றும் மலேரியா போன்ற பல்வேறு வகையான தொற்று நோய்களினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவக் கழிவுகள்

இலங்கையில் மருத்துவக்கழிவுகள் பற்றிய போதிய அறிவின்மையும் பிரதான வைத்தியசாலைகளில் இருந்து தனியொரு நிறுவனம் மாத்திரமே மருத்துவக் கழிவுகளைஅகற்றுவதில் ஈடுபடுவது இலங்கையின் சுகாதார துறைக்கு எதிர்காலத்தில் பாரிய அச்சுறுத்தலாக அமைய வாய்ப்புள்ளது.

கண்டி தேசிய வைத்தியசாலை தவிர்ந்தமேலும் இலங்கையில்காணப்படுகின்ற ஐந்து அரச வைத்தியசாலைகளில் இருந்து பெறப்படும் மருத்துவக் கழிவுகளை குறித்த ஒரே ஒரு தனியார் நிறுவனத்திற்கு மாத்திரமே கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் செப்டம்பர் தொடக்கம் டிசம்பர் வரையானகாலப்பகுதியில் கண்டி தேசியவைத்தியசாலையில்மேற்கொள்ளப்பட்டபுலனாய்வின் போது மருத்துவக் கழிவுகள் அகற்றுவதில் எந்தவித பாதுகாப்பு அணிகலன்களும்பயன்படுத்தாமை கண்டறியப்பட்டது .

கறுப்பு உறையில் சேகரிக்கப்பட்ட மருத்துவக்கழிவுகள்

நரம்பியல் சத்திர சிகிச்சை பிரிவில் தாதிமார் கையுறைகளின்றி வெறுங்கையுடன் மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்துகின்றமை கண்டுபிடிக்கப்பட்டது. 

அது மட்டுமல்லாமல் நோயாளிகளுக்கு பயன்படுத்தியபின் தூக்கி எறியப்படும் இரத்தம் தோய்ந்த பஞ்சு, காயக்கட்டுகள், மருந்து செலுத்திய ஊசிகள் மற்றும் சேலைன் போன்றவை சாதாரண கழிவுகளிடும் உறையில் போடப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.

ஆகவே ஆய்வு நீதியாக மருத்துவக் கழிவுகள் சூழலுக்கும் மனிதனுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த வல்லது என உறுதிப்படுத்தப்படும் நிலையில் இதனை தடுப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உரிய பொறி முறைகளைக் கையாள வேண்டும். 

சொர்ணலிங்கம் வர்ணன்

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு