SuperTopAds

100 வருடங்களுக்கு பின் டைட்டானிக் கப்பலில் கண்டெடுக்கப்பட்ட தங்க நெக்லஸ்

ஆசிரியர் - Editor II
100 வருடங்களுக்கு பின் டைட்டானிக் கப்பலில் கண்டெடுக்கப்பட்ட தங்க நெக்லஸ்

100 வருடங்களுக்கு பின்னர் டைட்டானிக் கப்பலில் கண்டெடுக்கப்பட்ட தங்க நெக்லஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 100 வருடங்களுக்கு முன்பு 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அட்லாண்டிக் பெருங்கடலில் பயணம் செய்த மிகப் பிரமாண்டமான ‘டைட்டானிக்’ கப்பலில் பனிப்பாறையில் மோதி நடுக்கடலில் மூழ்கியது. 

இச்சம்பவத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். தற்போது வரை இச்சம்பவம் காலத்தால் அழியாத சுவடாக உள்ளது.

இந்நிலையில், நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்த பயணி ஒருவரின் மெகாலோடான் பல்லுடன் கூடிய தங்க நெக்லஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

2022 ஆம் ஆண்டு, நடுக்கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பல் குறித்த ஆய்வில் ரமேஸ் டைட்டானிக் இன்க் (RMS Titanic Inc) என்ற நிறுவனம் ஈடுபட்டு வந்தது. 

அப்போது இந்த நிறுவனம் நீருக்கடியில் ரிமோட் மூலம் வாகனங்களை இயக்கி ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில், நடுக்கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளில் ஒரு தங்க நெக்லஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நெக்லஸ் 6 அங்குல நீளமும் கொண்டதாம். தற்போது வரை அந்த தங்க நெக்லஸ் நல்லமுறையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், அந்த நெக்லஸ் யாருடையது என்று கண்டுபிடிக்கப்பட முடியவில்லை.

100 வருடங்களுக்கு மேலாக நடுக்கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொருள் என்ற சிறப்பை இந்த நெக்லஸ் பெற்றுள்ளது.

இந்த நெக்லஸ் டென்னசியில் உள்ள பிக்யன் போர்ஜில் உள்ள டைட்டானிக் மியூசியத்தில் பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது. அந்த நெக்லஸ் டைட்டானிக் கப்பலில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் நினைவு சின்னமாக பார்க்கப்படுகிறது.