லியோ பாடலை தடை செய்ய கோரி முறைப்பாடு!! -தளபதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்-

ஆசிரியர் - Editor II
லியோ பாடலை தடை செய்ய கோரி முறைப்பாடு!! -தளபதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்-

'லியோ' படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் தளபதி விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

அதே சமயத்தில் இந்த பாடல் போதைப் பொருளை ஊக்கவிக்கும் வகையில் இருப்பதாகவும், தளபதி விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் லியோ படத்தில் இடம்பெற்றுள்ள "நா ரெடி" பாடல் குறித்து சென்னை பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த பாடல் போதைப் பொருள் பாவனையை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் இருப்பதால் தடை செய்ய வேண்டும் என சென்னை கொருக்குப்பேட்டை ஜேஜே நகரை சேர்ந்த ஆர்டிஐ செல்வம் என்பவர் ஆண்லைன் வாயிலாக முறைப்பாடு செய்துள்ளார்.

தமிழக அரசும், பொலிஸாரும் போதை பொருள் சம்மந்தமாக விழிப்புணர்வு நடத்தி வரும் நிலையில் ரவுடிசத்தை ஊக்கவிக்கும் வகையில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளதால் தளபதி விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு