டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது தெரியுமா?

ஆசிரியர் - Editor II
டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது தெரியுமா?

உலகிலேயே மிகப் பெரிய பேரழிவு கடல் விபத்தாக கருதப்படும் டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கியது.

இதன் பாகங்களை பார்வையிடவும், ஆய்வு செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது அமெரிக்காவை சேர்ந்த ஓசன்கேட்.

இதற்காக நீர்மூழ்கி கப்பல் ஒன்று தயாரிக்கப்பட்டு சாகச சுற்றுலா செல்லும் திட்டத்தையும் தொடங்கியது.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 46 பேர் பயணித்துள்ள நிலையில், கடந்த 18 ஆம் திகதி 5 பேர் கொண்ட குழுவினர் டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணத்தை ஆரம்பித்தனர்.

இங்கிலாந்து தொழிலதிபர் ஹாமிஸ் ஹார்டிங், இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளி தொழில் அதிபர் ஷாஜாடா மற்றும் அவரது மகன் சுலைமான் தாவூத், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டைவர் பால் ஹென்றி, ஓசன்கேட் சாகச சுற்றுலா நிறுவனத்தின் சிஇஓ.,வும், நீர்மூழ்கியின் பைலட்டுமான ஸ்டாக்டன் ரஷ் ஆகியோர் பயணம் மேற்கொண்டனர்.

கப்பல் புறப்பட்ட ஒரு மணிநேரத்தில் தகவல் தொடர்பு துண்டான நிலையில் தேடுதல் பணிகள் முடக்கிவிடப்பட்டது.

தீவிர தேடுதலுக்கு பின், டைட்டானிக் கப்பல் மூழ்கி கிடக்கும் இடத்திலிருந்து 1600 அடி ஆழத்தில் டைட்டன் நீர்மூழ்கியின் பாகங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அதில் பயணம் செய்த அனைவருமே இறந்திருக்கலாம் என அமெரிக்க கடலோர காவல் படை தகவல் வெளியிட்டது.

ஆழ்கடலில் உள்ள அதிக அழுத்தம் காரணமாக டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதற்கு சென்ட்ராஃபிக் தூண்டுதலின், அதாவது பெரு வெடிப்பு என்று விவரிக்கின்றனர். அதிக அழுத்தம் காரணமாக உட்புறமாக வெடித்து சிதறுவதையே இது குறிக்கிறது.

30 நொடிகளில் இந்த வெடிப்பு நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது, எனினும் நீர்மூழ்கியின் சிதைந்த பாகங்களை ஆய்வு செய்த பின்னே முழுமையான தகவல் கிடைக்கலாம் என தெரிகிறது.

அதிக அழுத்தம் காரணமாக விபத்து நடந்திருப்பதால் பயணித்தவர்களின் உடல்களை மீட்பதும் சவாலக இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு