காணாமற்போன நீர்மூழ்கிக் கப்பல் பயணியின் மனைவி டைட்டானிக் கப்பலில் மூழ்கியோரின் வம்சாவளியைச் சேர்ந்தவர்
(கோப்புப் படம்: AP/Wilfredo Lee)
அட்லான்ட்டிக் கடலுக்குள் காணாமற்போன நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள பயணிகளில் ஒருவரான ஸ்டாக்டன் ரஷின் (Stockton Rush) மனைவியின் வம்சத்தைச் சேர்ந்த இருவர் 1912ஆம் ஆண்டு மூழ்கிய டைட்டானிக் கப்பலில் மாண்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Titan என்கிற அந்த நீர்மூழ்கிக் கப்பலை நிர்வகிக்கும் OceanGate Expeditions நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, ரஷ்.
தொழிலதிபர் இசிடோர் ஸ்ட்ராஸும் (Isidor Straus) அவரின் மனைவி ஐடாவும் (Ida) டைட்டானிக் கப்பலில் இருந்த ஆகப் பெரிய செல்வந்தர்களில் இருவர்.
அவர்களுடைய பேரனின் பேத்திதான் ரஷின் மனைவியான வெண்டி ரஷ் (Wendy Rush) என்று New York Times செய்தி நிறுவனம் கூறியது.
வெண்டி ரஷ் Oceangate நிறுவனத்தில் தொடர்பு இயக்குநராகப் பணியாற்றுகிறார்