வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்! கொலையா? விபத்தா? ஒருவர் கைது...

வெட்டுக் காயங்களுடன் சிறுவன் ஒருவன் சடலமாக மீட்க்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் புல் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 51 வயதான சந்தேகநபரான இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லேரியா, ஹல்பராவ பிரதேசத்தில் வெட்டு காயங்களுடன் குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முல்லேரிய பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது நேற்றுமுன்தினம் (08) பிற்பகல் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மாலபே - ஹல்பராவ பகுதியை சேர்ந்த சுமார் 5 அரை வயதான குழந்தையொன்றே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்து வாழும் நிலையில், தாய் பகல் நேரங்களில் வேலைக்கு செல்வதால் தாத்தா மற்றும் பாட்டியின் அரவணைப்பில் குழந்தை இருந்துள்ளமை தொியவந்துள்ளது.