யாழ்.காங்கேசன்துறையில் வாள் செய்து கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டவருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு...

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறையில் வாள் செய்து கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டவருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு...

யாழ்.காங்கேசன்துறை பகுதியில் வாள் செய்து கொண்டிருந்த குற்றச்சாட்டில் கைதான ஒருவர் 14 நாட்களுக்கு விளக்கமறியலில்  வைக்க உத்தரவிட்ட மல்லாகம் நீதவான் நீதிமன்றம் மற்றொருவரை பிணையில் விடுவித்தது.

இது குறித்து மேலும் தெரிவியவருவதாவது, காங்கேசன்துறை பகுதியில் வாள் செய்து கொண்டிருந்த நான்கு பேரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்தனர். 

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து வாள் செய்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டினை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தினர். 

அதன் போது வாள் செய்து கொண்டிருந்த நால்வரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பொலிஸார் விசாரணையின் பின்னர் இருவரை விடுவித்து விட்டு இருவரை மாத்திரம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

இதன்போது ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் மற்றொருவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு