தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் இருவருக்கும் பிணை!!

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் இருவருக்கும் பிணை!!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி தலைவி மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர் ஆகியோருக்கு பிணை வழங்கி கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த இருவர் தொடர்பான வழக்கு கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று (07) எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது விசாரணைக்கு உட்படுத்திய நீதவான் குறித்த இரண்டு சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில் இருவரும் தலா 5 லட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக எதிர் தரப்பு சட்டத்தரணி சுகாஸ் ஊடகங்களிற்கு தெரிவித்தார்.

கடந்த 03 ஆம் திகதி அன்று வடமராட்சி கிழக்கு தளையடி பொது விளையாட்டரங்கில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் தம்மை உறுதிப்படுத்தாத நபர்கள் புகைப்படம் எடுத்தபோது அவர்கள் யார் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது ஆய்வு உத்தியோகத்தர் ஆகியோர் வினவினர்.

மேலும் அவர்கள் தங்களுடைய அடையாளங்களை நிரூபிக்க தவறிய வேளையில் அவரை அடையாளத்தை நிரூபித்துவிட்டு செல்லுமாறு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்கப்பட்டபோது அவர் மீது தாக்குதல் நடத்தி தப்பிய சம்பவம் தொடர்பிலும், 

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கடந்த 05 ஆம் திகதி அதிகாலை மருதங்கேணி பொலிஸாரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும் அன்றைய தினம் மற்றுமொரு சந்தேக நபரான உதயசிவமும் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த இருவரும் நீதிமன்றம் முன்னிலைப் படுத்தப்பட்டனர். குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்தக் கொண்ட நீதவான் இருவரையும் 7 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த இருவருக்கும் பிணை வழங்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு