SuperTopAds

ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள விஷன் ப்ரோ ஹெட்செட்!! இலங்கையில் விலை என்ன தெரியுமா?

ஆசிரியர் - Editor II
ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள விஷன் ப்ரோ ஹெட்செட்!! இலங்கையில் விலை என்ன தெரியுமா?

மெடாவெர்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆக்மென்டெட் ரியாலிட்டி ஹெட்செட் “விஷன் ப்ரோ”-வை ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

ரியாலிட்டி ஹெட்செட் வெளியீடு

ஆப்பிள் நிறுவனத்தின் டெவலப்பர்ஸ் கான்பரன்ஸ் அமெரிக்காவின் கியூபர்டினோவில் இடம்பெற்று.

இந்த டெவலப்பர்ஸ் கான்பரன்ஸில் ஆப்பிள் நிறுவனம் தங்களது ஆக்மென்டெட் ரியாலிட்டி ஹெட்செட் “விஷன் ப்ரோ”வை அறிமுகம் செய்து வைத்தது.

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பார்த்தவர்கள், மெய்நிகர் தொழில்நுட்பத்தை ஹெட்போன் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியதாக தெரிவித்தனர்.

அத்துடன் இந்த தொழில்நுட்பம் பிரத்யேக கன்ட்ரோலர் இல்லாமல், சென்சார்கள், கேமராக்களை கொண்டு வாய்ஸ் இன்புட் மற்றும் செயற்கை மொழியில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 100க்கும் மேற்பட்ட கேம்களை மெய்நிகர் தொழில்நுட்பத்துடன் விளையாட முடியும்.

இலங்கையில் இந்த ஹெட்செட்டின் விலை 1,023,060 ரூபாவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டின் தொடக்கத்திலும், மற்ற நாடுகளில் அடுத்த ஆண்டின் இறுதியிலும் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விஷன் ப்ரோ ஹெட்போன் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.