டெங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள் என கூறி வீட்டுக்குள் நுழைந்து 13 லட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளை!

தம்மை டெங்கு ஒழிப்பு அதிகாரிகள் என கூறிக்கொண்டு வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த 73 வயதான வயோதிப பெண்ணின் கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு சுமார் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் சுமார் 13 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசி என்பனவே கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
குறித்த வீட்டுக்குச் சென்ற கொள்ளையர்கள், வயோதிப பெண்ணிடம் அருந்துவதற்கு தண்ணீர் கேட்டதாகவும், அதனை கொடுப்பதற்காக சமையல் அறைக்குள் நுழைந்தபோது,
அவரின் பின்னால் சென்று அவரது கை, கால்களைக் கட்டிவைத்து, பின்னர், அவர் அணிந்திருந்த மற்றும் வீட்டிலிருந்த தங்க நகைகள்,
கைத்தொலைபேசியை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.