வீட்டில் இறந்து கிடந்த குடும்ப பெண்! யாரோ கொலை செய்துவிட்டதாக கணவன் முறைப்பாடு...

கெக்கிராவ - செக்குபிட்டிய பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனது மனைவியை எவரோ கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக அவரது கணவர் கெக்கிராவ பொலிஸ் நிலையத்தில் நேற்று (2) முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவத்தில் தனது கணவர், குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்துவந்த 35 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினமான நேற்று மனைவி வேறு அறையில் தூங்கிக்கொண்டிருந்ததாக கணவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம் மற்றும் சந்தேக நபர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என தெரிவிக்கும் கெக்கிராவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.