இலங்கையில் 35க்கும் மேற்பட்டவர்களின் பார்வையை பறித்த இந்திய தயாரிப்பான கண்சொட்டு மருந்து...

இலங்கையில் சுமார் 35ற்கும் மேற்பட்டோருக்கு கண் பார்வை குறைபாட்டை ஏற்படுத்திய இந்தியாவின் கண்சொட்டு மருந்து குறித்து இந்திய மருந்து தரகட்டுப்பாட்டு அமைப்பு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
குஜராத்தை சேர்ந்த இன்டியானா ஒப்தல்மிக்ஸ் நிறுவனத்தின் மருந்து குறித்தே விசாரணைகள் இடம்பெறுகின்றன.
ஏப்பிரல் மாதம் இலங்கையின் அரச மருந்துவமனையில் இந்தமருந்தினை பயன்படுத்தியதால் பலரின் கண்பார்வை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கையின் சுகாதார அமைச்சு இந்த மருந்தினை மீளப்பெற்றிருந்தது.
இந்த கண்மருந்தில் பக்டீரியா காணப்பட்டதாக சண்டே கார்டியன் செய்திவெளியிட்டிருந்தது.
குறிப்பிட்ட நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களிற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்திய அதிகாரிகள் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என இலங்கை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து இலங்கை இறக்குமதி செய்த கண்சொட்டு மருந்துகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன என எங்களிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சில நோயாளிகளிற்கு பக்டீரியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது என இந்திய அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 35க்கும் அதிகம் என எங்களிற்கு தெரிவித்துள்ளனர் இலங்கை அமைச்சரவையிலும் இது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
என இந்திய அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார்.
அரசமருத்துவமனை அதிகாரிகள் அந்த மருந்தினை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர் முடிவி;ற்காக காத்திருக்கின்றனர் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த கண்சொட்டுமருந்தினை மலட்டுத்தன்மை குறித்த சோதனைக்கு உட்படுத்தவேண்டியுள்ளதால் முடிவுகள் வெளியாக மேலும் 15 நாட்கள் தேவைப்படும் எனவும் இந்திய அதிகாரியொருவர் கூறியுள்ளார்.