யாழ்.மாநகரில் யூஸ் வழங்க மறுத்ததால் கடை உரிமையாளரை வெட்டிய 3 பேர் கைது, 3 பேர் தலைமறைவு...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் யூஸ் வழங்க மறுத்ததால் கடை உரிமையாளரை வெட்டிய 3 பேர் கைது, 3 பேர் தலைமறைவு...

யாழ்.நகரில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் யாழ்.மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் மேனன் தலைமையிலான அணியினரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாள்வெட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் வாள்கள் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19 மற்றும் 20 வயதுடைய கொக்குவில் மற்றும் சுதுமலை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் கடை மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞர்கள் கடையில் யூஸ் தருமாறு கோரியதாகவும் கடைப்பூட்டியதன் காரணமாக உரிமையாளர் தர மறுத்ததால்,

காரணமாக ஏற்பட்ட தகராறே தாக்குதல் மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட நபர்கள் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்

தாக்குதலை 6 பேர் கொண்ட குழு மேற்கொண்டதாகவும் அதில் 3 பேர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு