கிஷோர் / மயூரன் / திலகராணி மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது!

ஆசிரியர் - Editor I
கிஷோர் / மயூரன் / திலகராணி மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது!

நீதிமன்ற தீர்ப்பை வலிதற்றதாக்கும் விதத்திலும் அதற்கு முரணாகவும் நடந்து கொண்டதாக தெரிவித்து முன்னாள் பிரதேச சபை உப தவிசாளர் செ.மயூரன், முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் திலகராணி ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்களான செ.மயூரன், ஞா.கிஷோர், திலகரணி ஆகியோர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி வி.திருக்குமரன் ஆதரவில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி க.சதீஸ்கரன் வழக்கில் பெயர் குறிப்பிட்ட தனது தரப்பிற்கும் குறித்த வழக்கு தீர்ப்புக்கும் எதுவித சம்பந்தமும் கிடையாது என்றும், 

சாவகச்சேரி பிரதேச சபைதான் தனது ஆவணங்களின் படி தனியார் அபகரித்த பிரதேச சபை வீதியை மீட்டது. பிரதேச சபையை இந்த வழக்கில் அழைத்தால் ஆவணங்கள் மன்றிற்கு தெரிந்து விடும் என்பதற்காகவே பிரதேச சபையை வழக்கிற்கு அழைக்காமல் மன்றை பிழையாக வழிநடத்தி எமது தரப்பை வேண்டுமென்றே அலைக்கழிக்கிறார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

 சட்டத்தரணின் வாதத்தை கேட்ட நீதிபதி வழக்கு தொடுத்த சட்டத்தரணி மன்றிற்கு சமூகமளிக்காமையினால் வழக்கினை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

தனியாரால் அபகரிக்கப்பட்ட இராமாவில் தாவளை இயற்றாலை ஊரெல்லை வீதியை பொதுமக்கள் பாவனைக்கு மீட்டுத் தருமாறு கோரி சாவகச்சேரி பிரதேச சபைக்கு முன்பாக கிராம மக்களோடு இணைந்து மயூரன், கிஷோர், திலகராணி ஆகிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து சாவகச்சேரி பிரதேசபை கொடிகாமம் பொலிஸாரோடு இணைந்து பிரதேச சபையில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தனியாரால் அபகரிக்கப்பட்டிருந்த குறித்த வீதியை அளவீடு செய்து எல்லை வேலிகளை அகற்றி பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே தனியாரால் சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதிநிதிகளை 

18.01.2021 ஆம் திகதி சாவகச்சேரி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை வலிதற்றதாக்கும் விதத்திலும் அதற்கு முரணான வகையிலும் செயற்பட்டதாக தெரிவித்து வழக்கு தொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு