யாழ்.பொதுநூலகம் எரிக்கப்பட்டதன் 42ம் ஆண்டு நினைவேந்தல் இன்று...
யாழ்.பொது நூலகம் காடையர்களால் தீ வைத்துக் கொழுத்தப்பட்டதன் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் , யாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.
நினைவேந்தலின்போது யாழ்.பொது நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா அவர்களுக்கும்,
பொது நூலகத்தை எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில் அங்கு சுமார் 97,000 அரிய நூல்கள் இருந்ததுடன், பழைமையான ஏடுகள் என்பவை பெரும்பான்மையின காடையர்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டது.
யாழ்.நூலகமே தென்கிழக்காசியாவில் மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.