யாழ்.சுன்னாகத்தில் தமது கிணற்று நீரை சுத்தம் செய்யாத பலர் தொடர்ந்தும் மாசு நீரையே பருகி வருகிறார்கள்...
யாழ்.சுன்னாகம் நொதோன் பவர் நிறுவனத்தின் கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது கிணறுகளை மீள பரிசோதிக்காமலே பயன்படுத்துகின்றனர் என யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பதில் பிரதேச செயலாளரரினால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற 2வது மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின்போது வடமாகாணசபை அவைத்தலைவரால் முன்வைக்கப்பட்ட விடையங்கள் தொடர்பில் ஆராய்ந்தபோது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சுன்னாகத்தில் இயங்கிய நொதேன் பவர் நிறுவனத்தின் கழிவு ஓயில் நீரில் கலந்தமையால் 2165 வீட்டு உரிமையாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு இடம் பெற்று நொதேன் பவரின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டது.
பாதிப்புபாதிக்கப்பட்டவர்களுக்கு 20 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு நீதிமன்றத்தால் தீர்க்கப்பட நிலையில் 2165 பேர் தமது கிணறுகளை சுத்தம் செய்வதற்கான நஷ்ட ஈட்டு நிதியினை பெற்ற நிலையில் 1342 பேர் இன்னும் தமது கிணறுகளை சுத்தம் செய்வதற்கான நிதியினை பெறாமல் உள்ளனர்.
நிதியினை வழங்கும்போது கழிவு ஓயினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், சாதாரணமாக பாதிக்கப்பட்டவர்கள் , பாதிக்கப்பட்டவர்கள் என மூன்று வகைப்படுத்தலின் கீழ் அவர்களுக்கான நிதி வழங்கப்பட்டது.
குறித்த நிதியினை பெறாதவர்கள் பெறுவதற்கு தயக்கம் காட்டுவதற்கு தாம் நிதியினை பெற்றுக் கொண்டால் இழப்பீட்டைப் பெற்றதாகக் கூறி மீண்டும் நொதோன் பவர் சுன்னாகத்தில் மீள ஆரம்பித்திடும் என்ற அச்சத்தினால் நிதியினை பெறாமல் உள்ளனர்.
அவர்கள் என்னிடம் நோதோன் பவர் மீள இயங்க மாட்டாது என்ற உத்தரவாதத்தை வழங்குமாறு கேட்கிறார்கள் உத்தரவாதத்தை வழங்கக்கூடிய அதிகாரம் என்னிடத்தில் இல்லை என பதிலளித்தேன்.
ஆகவே எமது பிரதேசத்தில் கழிவு ஓயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட கிணறுகளை பயன்படுத்துவோர் இன்னும் சுத்தம் செய்த பின்னர் குடிநீரை பரிசோதிக்காமலே பயன்படுத்துகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.