யாழ்.குடாநாட்டுக்கான குடிநீர் திட்டம்! சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு நியமனம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.குடாநாட்டுக்கான குடிநீர் திட்டம்! சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு நியமனம்...

யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை கொண்டுவருவதற்காக திட்டம் தொடர்பாக ஆராய்ந்து சிபார்சு வழங்குவதற்காக வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் வடமாகாணசபை அவைத் தலைவர் முன்வைத்த பிரேரணை தொடர்பான கலந்துரையாடலின்போது, 

யாழ்.மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சனை நீண்ட காலமாக நிலவிவருகின்ற நிலையில் அவை தொடர்பில் உங்களுக்கும் நன்கு தெரியும். மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பல திட்டங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில் 

பாலியாற்றுத் திட்டம் பயனுள்ளது எனக் கருதும் நிலையில் அதனை செயல்படுத்துவதற்கு மத்தியின் அனுமதியையும் நிதி ஒதுக்கீடுகளையும் பெறுவதற்கு நீங்கள் உதவ வேண்டும் என்றார்.

இதன்போது பதில் அளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாண மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக கிட்டத்தட்ட நான்கு திட்டங்கள் கொண்டுவரப்பட்டமையை நான் அறிந்தேன்.

இரனைமடுத் திட்டம், ஆறுமுகம் திட்டம், வடமராட்சி களப்புத் திட்டம், பாலியாற்று திட்டம் எனப் பல திட்டங்கள் ஒவ்வொரு காலப்பகுதியிலும் கொண்டுவரப்பட்டது ஆனால் எதிர்பார்த்த பயன் கிட்டவில்லை.

ஆகையால் நீங்கள் கூறும் ஆலோசனை எனக்குப் புரிகிறது உங்களை தலைவராக நியமிக்கிறேன் உங்கள் தலைமையில் துறைசார்ந்த நிபுணர்களை உள்ளடக்கி யாழ்.மாவட்ட மக்களுக்கான குடிநீர் திட்டத்தை சிபாரிசு செய்யுமாறு 

ஐவர் கொண்ட குழுவை அமைச்சர் டக்ளஸ் நியமித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு