SuperTopAds

வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படுகிறது! எரிசக்தி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படுகிறது! எரிசக்தி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..

நாளை 30ம் திகதி நள்ளிரவு தொடக்கம் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார். 

அதனடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டா 22 லீற்றராகவும், ஏனைய முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டா 14 லீற்றராகவும், 

மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் கோட்டா 14 லீற்றாராகவும், கார்களுக்கான எரிபொருள் கோட்டா 40 லீற்றராகவும், பஸ்களுக்கு வாரத்திற்கு எரிபொருள் கோட்டா 125 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கருத்து தெரிவிக்கையில், ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் புத்தாண்டின்போது எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்தோம்.

இருப்பினும் குறித்த எரிபொருள் ஒதுக்கீட்டு அதிகரிப்பு எமது வெளிநாட்டு கையிருப்பில் பாரியதொரு தாக்கத்தை செலுத்தவில்லை. இதனை மேலும் அதிகரிக்க முடியுமா? என ஆராயுமாறு ஜனாதிபதி தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தார்.

அதற்கமைவாக, அடுத்த மாதம் முதல் எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க முடியும். எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைவாக ஒதுக்கீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது என்றார். இந்நிலையில் தற்போது எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாளை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் உரிய திருத்தம் அமுலுக்கு வரும் என குறிப்பிட்டுள்ளார். அதன்படி பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு வாரத்திற்கு 22 லீற்றராகவும்,

ஏனைய முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு 14 லீற்றராகவும் விநியோகிக்கப்படும். மேலும் மோட்டார் சைக்கிள்களுக்கு வாரத்திற்கு 14 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது. 

கார்களுக்கு வாரத்திற்கு 40 லீற்றரும், பேருந்துகளுக்கு வாரத்திற்கு 125 லீற்றர் எரிபொருளும் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.