நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியிலிருந்து ஆண் ஒருவருடைய சடலம் மீட்பு!!

ஆசிரியர் - Editor I
நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியிலிருந்து ஆண் ஒருவருடைய சடலம் மீட்பு!!

வீதி ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்குள் இருந்து ஆண் ஒருவருடைய சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் கொட்டாவ - மகும்புர பிரதேசத்தில் வீதியொன்றுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்தே சடலம் மீட்க்கப்பட்டது. 

வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் கிடந்த நபர் தொடர்பில் 119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பேரில், 

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது குறித்த நபர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. இறந்தவர் யார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. 

இது கொலையா அல்லது இயற்கை மரணமா என கொட்டாவ காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு