SuperTopAds

முச்சக்கர வண்டியில் பயணித்த கணவன்/ மனைவி மீது துப்பாக்கி சூடு! கணவன் பலி, மனைவி படுகாயம்...

ஆசிரியர் - Editor I
முச்சக்கர வண்டியில் பயணித்த கணவன்/ மனைவி மீது துப்பாக்கி சூடு! கணவன் பலி, மனைவி படுகாயம்...

முச்சக்கர வண்டியில் பயணித்த கணவன், மனைவி மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் ஹபராதுவ, தல்பே, பொல்துவ விஹாரைக்கு அருகில் இன்று புதன்கிழமை (24) காலை இடம்பெற்றுள்ளது.

கொல்லப்பட்டவர் தல்பே ஹெயினடிகல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார்.

இரு பிள்ளைகளையும் பாடசாலைக்கு அழைத்துச் சென்றுவிட்டு மனைவியுடன் வீடு திரும்பியபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டின்போது முச்சக்கரவண்டியில் பயணித்த அவரது மனைவியும் காயமடைந்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.