மாயமான பிரித்தானிய பெண் வெளிநாட்டில் சடலமாக மீட்பு

ஆசிரியர் - Editor II
மாயமான பிரித்தானிய பெண் வெளிநாட்டில் சடலமாக மீட்பு

விடுமுறையை கொண்டாட கிரேக்கத்திற்க்கு சென்ற பிரித்தானியா பெண் ஒருவர் திடீரென்று மாயமான நிலையில், தற்போது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் பாத் (Bath) பகுதியை சேர்ந்த 74 வயது சுசாந்த் ஹார்ட் என்பவரே கிரேக்க தீவான டெலிண்டோஸ் (Telendos) பகுதியில் விடுமுறையை கழிக்க சென்றுள்ளார். இந்த நிலையில் ஏப்ரல் 30ம் திகதி முதல் அவர் மாயமானதாக தகவல் வெளியானது.

விடுமுறை பயணத்தில் அவரது கணவரும் உடன் சென்றுள்ளார். சுவிட்சர்லாந்தில் சுமார் 25 வருடங்களாக குடியிருக்கும் இந்த தம்பதி டெலிண்டோஸ் தீவுக்கு படகு மூலம் சென்றுள்ளனர்.

சம்பவத்தன்று, கணவர் எட் வெளியே சென்ற நிலையில் அந்த துயர சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. கணவர் எட் விடுதிக்கு திருபிய நிலையில், அவர் தமது மனைவியை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து தேடுதல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மூன்று வாரங்களுக்கு பிறகு ஹார்ட் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தீவின் கிராமப்பகுதி ஒன்றில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரேக்கத்தில் வைத்தே உடற்கூறு ஆய்வும் முன்னெடுக்கப்படும் என்றே கூறப்படுகிறது. ஹார்ட் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர், இதனாலையே சிக்கலை எதிர்கொண்டிருக்கலாம் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கிரேக்கத்தில் உள்ள பிரித்தானிய தூதரகம் ஊடாக தேவையான உதவிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு