இனிப்பு பண்டங்களை கொடுத்து சிறுமிகளை கடத்த முயற்சி! மடக்கிப் பிடித்து நையப்புடைத்த பின் பொலிஸாரிடம் ஒப்படைத்த மக்கள்...

ஆசிரியர் - Editor I
இனிப்பு பண்டங்களை கொடுத்து சிறுமிகளை கடத்த முயற்சி! மடக்கிப் பிடித்து நையப்புடைத்த பின் பொலிஸாரிடம் ஒப்படைத்த மக்கள்...

இனிப்பு பண்டங்களை கொடுத்து இரு சிறுமிகளை வாகனத்தில் கடத்த முயற்சித்தவர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்த பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

குறித்த சம்பவம் தலைமன்னார் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. நேற்று வியாழக்கிழமை (11) வாகனத்தில் வியாபார பொருட்களை விற்பனை செய்ய வந்த வாகனம் ஒன்றில் இருந்த சாரதி வீதியில் பயணித்த 

இரு சிறுமிகளுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி வாகனத்தில் கடத்த முற்பட்டுள்ளார். அச்சமயம் இரு பிள்ளைகளும் தப்பி சென்று கிராமத்தவர்களுக்கு தெரிவித்த நிலையில், 

கிராம மக்கள் இணைந்து குறித்த வாகனத்தையும் வாகன சாரதி மற்றும் உதவியாளர்களை மடக்கி பிடித்துள்ளனர்.

குறித்த சிறுமிகள் தப்பியோடி ஒழிந்த நிலையில் வாகனத்தில் வந்த நபர்கள் சிறுமிகளை துரத்திவந்துள்ளனர், மேலும்  வாகனத்தினுள் வெளிநாட்டு நபர் ஒருவர் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வாகனத்தை சோதித்த நிலையில் வெளிநாட்டவர் இருக்கவில்லை என்பதுடன் வாகனத்தில் இருந்த இரு சந்தேக நபர்களையும் பொதுமக்கள் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் 

தலை மன்னார் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு