கடற்படை சுற்றிவளைப்பில் வெடிபொருட்களுடன் 7 மீனவர்கள் கைது!

ஆசிரியர் - Editor I
கடற்படை சுற்றிவளைப்பில் வெடிபொருட்களுடன் 7 மீனவர்கள் கைது!

டைனமைற் வெடிபொருட்களுடன் மன்னார் நகர் கடற்கரையில் 7 மீனவர்கள் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இச்சம்பவம் நேற்று (08) காலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மன்னார் நகர் கடற்கரைப் பகுதியிலிருந்து மன்னார் தென் கடல் பரப்பில் ஏழு மீனவர்கள் வெளிக்களப் படகு ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த படவை வழிமறித்த கடற்படையினர் படகை சோதனையிட்டபோது, டைனமற் வெடிப் பொருட்கள் காணப்பட்டுள்ளது. 

இதனையடுத்து படகுடன் ஏழு மீனவர்களையும் கைது செய்துள்ள கடற்படை சந்தேக நபர்களையும், சான்றுப் பொருட்களையும் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 

மன்னார் பொலிஸார் சந்தேக நபர்களை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதுடன், நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான 

நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு