SuperTopAds

காவிரியில் தமிழகத்துக்கான நீர்வரத்து ஒரே நாளில் 20,000 கனஅடி அதிகரிப்பு : ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு

ஆசிரியர் - Editor II
காவிரியில் தமிழகத்துக்கான நீர்வரத்து ஒரே நாளில் 20,000 கனஅடி அதிகரிப்பு : ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு

காவிரியில் தமிழகத்துக்கான நீர்வரத்து ஒரே நாளில் 20,000 கனஅடி அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கபிணி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் எல்லையான பிலிகுண்டுலு வழியாக  ஒகேனக்கலை வந்தடைந்தது. 

இதனால் ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 1,600 அடியாக வந்து கொண்டிருந்த தண்ணீர் இன்று காலை நிலவரப்படி 21,000  கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மெயினருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் காலை நேரத்தில் அருவிக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.