குட்கா மோசடியை விசாரிக்க அமலாக்கத்துறை தீவிரம் : விஜயபாஸ்கர், டி.ஜி.பி.க்கு முற்றுகிறது நெருக்கடி
குட்கா மோசடி தொடர்பான விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ள நிலையில் அமலாக்கத்துறையும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தியுள்ளது. குட்கா மோசடி தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வழங்கும் படி வருமான வரித்துறை லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. குட்கா விவகாரத்தில் சில தினங்களுக்கு முன் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.
இது தொடர்பான விசாரணைக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜுலை மாதம் எம்.டி.எம். குட்கா தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கேட்டு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. சோதனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி உள்ளிட்டோருக்கு ரூ.39 கோடி லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதே போன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தில் குட்கா மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட்ட கடிதமும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது. அனைத்து ஆவணங்களையும் பெற்று விசாரணையை தொடங்க அமலாக்கத்துறை அதிகாரிகள் தயாராகி வருகின்றன.