புதுக்குடியிருப்பு - கொழும்பு இ.போ.ச பேருந்து டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து. டிப்பர் வாகன சாரதி பலி, பயணிகள் பலர் படுகாயம்...

ஆசிரியர் - Editor I
புதுக்குடியிருப்பு - கொழும்பு இ.போ.ச பேருந்து டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து. டிப்பர் வாகன சாரதி பலி, பயணிகள் பலர் படுகாயம்...

புதுக்குடியிருப்பு - கொழும்பு இ.போ.ச பேருந்து தம்புல கோமாகவ பகுதியில் நேற்றிரவு 11.30 மணியளவில் நேருக்கு நேர் மோதி கோர விபத்தில் சிக்கியுள்ளது. 

தம்புல கோமாகவ என்ற பகுதியில் இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி டிப்போவுக்கு சொந்தமான இ.போ.ச பேருந்தும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் டிப்பர் வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இதேவேளை அரச பேருந்தில் பயணித்த சாரதி உட்பட எட்டுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

அரச பேருந்தில் பயணித்தவர்களில் அதிகமானவர்கள் கிளிநொச்சி மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என அறிய முடிகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு